Site icon Sangathy News

பிரேஸிலை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம்..!

பிரேஸிலை வாட்டி வதைக்கும் கடும் வெப்பத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று (18) அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வெப்பத்தைத் தணிக்க மக்கள் நீர்நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் நாட்களிலும் இதேநிலை காணப்படும் என்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version