Site icon Sangathy News

விளையாட்டுதுறையை ஊக்குவிக்க ஹங்கேரி – இலங்கை ஒப்பந்தம்..!

விளையாட்டு மற்றும் விளையாட்டுக் கல்வி போன்ற துறைகளை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்துக்கும் ஹங்கேரி அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்மொழியப்பட்டுள்ளது.

நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

குறித்த ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

Exit mobile version