Site icon Sangathy News

ஏப்ரல் ஆரம்பத்திலேயே பாரிய வேலை நிறுத்தம்..!

அரசு நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அரசு தொடர்ந்து சாதகமான பதில் அளிக்காததால், ஏப்ரல் முதல் வாரத்தில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக, 18 தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இன்று (22) காலை நிர்வாகப் பரீட்சை திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரி தொழிற்சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் பிரதமருடனான கலந்துரையாடலின் போது, ​​நிறைவேற்று அதிகாரிகள் தம்மைப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் குழு குறிப்பிடுகிறது.

மார்ச் மாதம் 31ஆம் திகதி அமைச்சரவையில் உரிய தீர்வுகள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் குழு, இல்லாவிடின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

கல்வி நிர்வாக சேவைகள் தொழிற்சங்கம், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப தொழிற்சங்கம், கணக்காளர் தொழிற்சங்கம், பரீட்சை திணைக்கள தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் பங்களிப்புடன் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version