Site icon Sangathy News

தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!

பாராளுமன்ற தேர்தல் திகதி அறிவிப்பதற்கு முன்பாகவே அ.தி.மு.க. – தே.மு.தி.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது.

2 கட்டங்களாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் நேற்று முன்தினம் உடன்பாடு ஏற்பட்டு, அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலுக்காக தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியது. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும் ஆனது.

இந்தநிலையில் மக்களவைத்தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்கள் விவரம்:

1) விருதுநகர் – விஜய பிரபாகர்

2) மத்திய சென்னை – பார்த்த சாரதி

3) திருவள்ளூர் தனி – நல்ல தம்பி

4) தஞ்சை – சிவநேசன்

5) கடலூர் – சிவக்கொழுந்து

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகர் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version