Site icon Sangathy News

ஐ.பி.எல். : முதலாவது வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் அணி..!

ஐ.பி.எல் 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (23) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டில்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.

இதன்படி , டில்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் டில்லி அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 25 பந்துகளில் 33 ஓட்டங்களை ஷாய் ஹோப் பெற்றுக்கொடுத்ததுடன் அபிஷேக் போரல் 32 ஓட்டங்களை 10 பந்துகளில் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்ததுடன் ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படி, அவுஸ்திரேலிய அணிக்கு 175 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி, 19.2 ஒவர்கள் முடிவில் 06 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன் மூலம் தனது முதலாவது வெற்றியை பஞ்சாப் அணி பதிவு செய்தது.

 

Exit mobile version