Site icon Sangathy News

பணத்துக்காகவே மக்களை சுட்டுக்கொன்றோம் : மொஸ்கோ தாக்குதல்தாரிகள் வாக்குமூலம்..!

மொஸ்கோ தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

க்ரோகஸ் சிட்டி ஹோலில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற இசைநிகழ்ச்சியின் போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் தாக்குதல் தொடர்பில்11 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 3 பேர் பாஸ்மேன்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

காயங்களுடன் சக்கர நாற்காலியில் நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது, பணத்துக்காகவே மக்களை சுட்டுக்கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அவர்களை எதிர்வரும் மே 22ஆம் திகதி வரை விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version