Site icon Sangathy News

SLPP யின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை இன்று (27) கூடவுள்ளது.

இந்த ஒன்றுகூடல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இது ஒன்றுகூடல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையானது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிற்பகல் 3 மணிக்கு கூடவுள்ளது. பொதுவாக நிறைவேற்று சபையானது அரசியலமைப்பு ரீதியாக அவசியமான சில சூழ்நிலைகளில் கூடும். அதன்படி இது வழமையான கூட்டமாகும். தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியின் உள் விவகாரங்கள் குறித்து பல விவாதங்கள் நடைபெறம்” என தெரிவித்தார்.

Exit mobile version