Site icon Sangathy News

அஜித் குமார் இல்ல.. என் கணவர் சூர்யா தான் : ஜோதிகா

அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பது போன்று அஜித் குமார் தன் முதல் பட ஹீரோ இல்லை என ஜோதிகா கூறியிருக்கிறார். என் கணவர் சூர்யா தான் என் முதல் பட ஹீரோ என்கிறார் ஜோதிகா. அது எப்படி என்றும் விளக்கம் அளித்துள்ளார் அவர்.

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் குமார், சிம்ரன் நடிப்பில் வெளியான வாலி படம் மூலம் தான் கோலிவுட்டில் அறிமுகமானார் ஜோதிகா என அனைவரும் சொல்வது உண்டு.

வாலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜோதிகா. இதையடுத்து வசந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான “பூவெல்லாம் கேட்டுப்பார்” படம் மூலம் ஹீரோயின் ஆனார். அந்த படத்தில் நடித்தபோது தான் சூர்யா, ஜோதிகா இடையே காதல் உருவானது என்று பேசப்பட்டது.

இந்நிலையில் தன் முதல் பட ஹீரோவே சூர்யா தான் என்கிறார் ஜோதிகா. இது குறித்து ஜோதிகா கூறியிருப்பதாவது,

1998ம் ஆண்டு டோலி சஜாகே ரக்னா இந்தி படத்தில் நடித்தேன். ப்ரியதர்ஷன் இயக்கிய அந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்தது. அந்த நேரத்தில் தான் வசந்த் என்னை சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

நான் முதலில் கமிட்டான படம் பூவெல்லாம் கேட்டுப்பார் தான். ஆனால் வாலி படம் முதலில் ரிலீஸாகிவிட்டது. நான் கோலிவுட்டுக்கு வந்தபோது எனக்கு வெறும் 17 வயது என்றார்.

சூர்யாவை காதலித்து பெரியவர்கள் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். தற்போது மீண்டும் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார் ஜோதிகா. அதனால் அடிக்கடி பயணம் செய்வதை தவிர்க்க மும்பையில் வீடு எடுத்து தங்கியிருக்கிறார்.

பிள்ளைகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் வழக்கம் போன்று ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால் ஜோதிகா குழந்தைகளுடன் மும்பைக்கு சென்றதும் அவர்கள் விவகாரத்து பெறப் போவதாக பேச்சு கிளம்பியது.

நான் சூர்யாவை விவகாரத்து எல்லாம் செய்யவில்லை. படங்களில் நடிக்கவே மும்பையில் தங்கியிருக்கிறேன். கமிட்மென்ட் முடிந்ததும் சென்னைக்கு திரும்பிவிடுவேன் என விளக்கம் அளித்தார் ஜோதிகா. பல ஆண்டுகள் கழித்து ஜோதிகா நடிப்பில் வெளியான சைத்தான் பாலிவுட் படம் உலக அளவில் ரூ. 154 கோடி வசூல் செய்திருக்கிறது. அந்த படத்தில் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

Exit mobile version