Site icon Sangathy News

தடுப்பூசி ஏற்றப்பட்ட 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

பாடசாலையொன்றில் மாணவர்கள் குழுவொன்றுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

களுத்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் 12 வயது மற்றும் 13 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதனாலேயே குறித்த 10 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version