Sangathy News

யாழில் வாள்வெட்டு : கையை இழந்த குடும்பஸ்தர்..!

யாழ்ப்பாணம் – வடமராட்சி தம்பசிட்டி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டுள்ளது.

30 வயதுடைய செல்வநாயகம் செந்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே வாள்வெட்டுக்கு இலக்காகியவராவார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..,

உறவினர்களிடையே ஏற்பட்ட வன்முறையில் வாள்களுடன் சென்ற குழுவொன்று நபரொருவர் மீது வாளால் வெட்டி கையை துண்டாடியுள்ளனர்.

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version