Site icon Sangathy News

18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது..!

கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாரில் உள்ள போதை ஒழிப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக குறித்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் வைத்து சோதனை மேற்கொண்ட போது 18 கிலோ 470 கிராம் கஞ்சா குறித்த சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், சான்று பொருட்களும் கிளிநொச்சி பொலிஸ் காவவில் உள்ள நிலையில் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version