Site icon Sangathy News

சுற்றுலா பயணிகளால் 1,025 மில்லியன் USD வருமானம்..!

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கிடைத்த வருமானம் 1,025 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1 வருடத்தில் இந்த நாட்டிற்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தில் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அந்த எண்ணிக்கை 23 இலட்சம் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version