Site icon Sangathy News

ஆப்கானில் கடும் வெள்ளம் : 33 பேர் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், கடந்த மூன்று நாள்களில் 33 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தாலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட கடும் வெள்ளம், பல்வேறு மாகாணங்களையும் பாதித்துள்ளது.

இந்த வெள்ளத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள. 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. சுமார் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவித்துள்ளார்.

பல முக்கிய சாலைகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version