Site icon Sangathy News

சீனுக்கல துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது..!

ஹம்பேகமுவ சீனுக்கல பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் ஒருவரை ஹம்பேகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ஹம்பேகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.

சினுக்கல பிரதேசத்தில் கடந்த 12 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மற்றைய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version