Site icon Sangathy News

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு..!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 19-ஆம் திகதி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

மேலும், ஒரு சில இடங்களில துப்பாக்கிச்சூடு சம்பவமும், மிரட்டல் தொடர்பான சம்பவங்களும் நடைபெற்றன. இதனால் 11 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று இம்பால் கிழக்கு தொகுதிக்கு உடபட்ட மொய்ராங்காம்பு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும் பெண்கள் மற்றும் ஆண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

Exit mobile version