Site icon Sangathy News

தியத்தலாவ வாகன விபத்து : இரு போட்டியாளர்கள் கைது..!

தியத்தலாவ ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற கார் பந்தயத்தில் இடம்பெற்றவிபத்து தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஏற்பட்ட குறித்த விபத்தில் இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு 23 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version