Site icon Sangathy News

மெட்ரோ ரெயில் நிலையத்தில் பெண் மீது எச்சில் துப்பிய வாலிபர்..!

பொதுவாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மிகவும் தூய்மையாக இருக்கும். அங்கு பயணிகளும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என மெட்ரோ நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டரில் சென்ற போது ஒரு வாலிபர் தன் மீது எச்சில் துப்பியதாக ரிஷிகா குப்தா என்ற பெண் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் ரிஷிகா தனது பதிவில் ஒரு வாலிபரின் படத்தை பதிவிட்டிருந்தார்.

அதில், அந்த வாலிபர் தன் மீது எச்சில் துப்பியதாக குறிப்பிட்டு இந்த வகையான மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஒருவர் எவ்வளவு அழுக்காக இருக்க முடியும் என்பது எனக்கு புரியவில்லை. மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர் தனது செயலுக்காக வருத்தப்படவில்லை. அவரை போன்ற ஒரு வாலிபரை எந்த பெண்ணும் சந்திக்க கூடாது என ஆவேசமாக பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவு 11 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version