Site icon Sangathy News

பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு..!

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் இன்று (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்படி, இந்த வருடத்தின் பாடசாலை முதல் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பாடசாலை முதல் தவணையின் முதல் கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்தது.

இதற்கிடையில், மே 6 முதல் 18 வரை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

அதன்படி, இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் மே 3ம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.

Exit mobile version