Sangathy
World Politics

நைஜீரியாவில் கனமழையால் சேதமடைந்த சிறைச்சாலை: 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓட்டம்..!

நைஜீரியா நாட்டின் தலைநகர் அபுஜா அருகே உள்ள நைஜர் மாநிலத்தின் சுலேஜா என்ற இடத்தில் பழமையான சிறைச்சாலை ஒன்று உள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருந்து வேலி உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளது. இதனை பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையை உடைத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைத்துறையினர் மற்றும் மற்ற ஏஜென்சிகள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 கைதிகளை பிடித்துள்ளனர். மற்றவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சுலேஜாவை ஒட்டியுள்ள மாநிலத்தில் அடர்ந்த காட்டிற்குள் தப்பி ஓடிவிட்டால் பிடிக்க கஷ்டமாகிவிடும் என அதிகாரிகள் பயப்படுகின்றனர். அந்த காடு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள கும்பல் அதிகமாக வாழ்ந்து வரக்கூடிய இடமாகும்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நைஜீரியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னதாக, 1960-க்கும் முன் காலனி ஆதிக்கத்தில் கட்டப்பட்டதாகும்.

கட்டமைப்புகள் அரிதாகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் கைதிகள் தப்பிக்க மிகவும் எளிதாகிவிட்டன. அபுஜா ஜெயிலில் இருந்து இதுபோன்று ஆயிரம் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். 2022-ல் சுமார் 900 கைதிகள் தப்பிச்சென்றனர்.

Related posts

கிம் ஜாங் உன்னை சந்திக்க ஜப்பான் பிரதமர் விருப்பம் : வடகொரியா..!

tharshi

களைகட்டிய ஆனந்த் அம்பானி திருமண விழா : ஆத்திரத்தில் இத்தாலி மக்கள்..!

tharshi

உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy