Sangathy
Sports

T20 World Cup 2024 : அந்த சொதப்பல் பௌலரை நீக்கி நடராஜனை சேர்க்க முடியுமாம் : விதிமுறை இதுதான்..!

டி20 உலகக் கோப்பை தொடருக்கான, இந்திய அணியை மாற்றியமைக்க இன்னமும் அவகாசம் இருக்கிறது.

ஐபிஎல் 17ஆவது சீசன் மே 26 ஆம் திகதி நிறைவு பெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகார்கரிடம் சமர்பித்துள்ளனர். அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பௌலர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்தது. ஸ்லோ விக்கெட்டில் கோலி அபாரமாக ஆடக் கூடியவர் என்பதால், அவர் நிச்சயம் விளையாடுவார் எனக் கூறப்பட்டது.

15 வீரர்கள் இடம்:

இந்திய அணியில், 15 வீரர்களின் இடம் உறுதியாகிவிட்டதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது . ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகிய பேட்டர்களின் இடங்கள் உறுதியாகிவிட்டதாக நேற்று கூறப்பட்டது.

அணி அறிவிப்பு:

இந்நிலையில், தற்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். கேப்டனாக ரோஹித் சர்மா, துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பட்டியல் இதுதான்:

ரோஹித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ்.

டி நடராஜன்:

நடப்பு ஐபிஎல் தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பௌலர் டி நடராஜன் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். குறிப்பாக, டெத் ஓவர்களில், சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுத்து, முக்கிய விக்கெட்களை கைப்பற்றி அசத்தி வருகிறார். ஆனால், இவருக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு வழங்கவில்லை.

சொதப்பல் பௌலர்:

ஆனால், மற்றொரு இடது கை பௌலர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில், பௌலர்களுக்கு சாதகமான பிட்சிலேயே, 4 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார். ஆனால், இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதான், ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மாற்ற முடியும்:

டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அணிகளை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். வரும் மே 15ஆம் தேதி வரை அவசாகம் இருக்கிறது. இதனால், அந்த காலகட்டத்திற்கு அர்ஷ்தீப் சிங் தனது திறமையை நிரூபிக்கவில்லை என்றால், அவருக்கு மாற்றாக டி நடராஜனை கூட சேர்க்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

Colombo Strikers win by 9 runs

Lincoln

சுப்மன் கில்லுக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு..!

Lincoln

MCC changes wording of non-striker run-out Law for better clarity

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy