கேன்ஸ் திரைப்பட விழாவில் ஃபால்குனி ஷேன் பீகாக் வடிவமைத்த கருப்பு நிற கவுனில் சிவப்புக் கம்பளத்தில் அழகாக நடந்து வந்தார் ஐஸ்வர்யா ராய் பச்சன். அந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து விட்டது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் தன் செல்ல மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். கையில் காயத்துடன் அவர் கேன்ஸுக்கு சென்றது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழா மே 14ம் திகதி துவங்கி நடந்து வருகிறது. மே 25ம் திகதி வரை இந்த விழா நடக்கிறது. இந்த ஆண்டும் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டு சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தார். கருப்பு நிற டிசைனர் கவுனில் ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகாக இருந்தார். அவருக்கு துணையாக மகள் ஆராத்யா சென்றிருக்கிறார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்த ஐஸ்வர்யா ராய் பச்சனை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். கையில் கட்டுடன் இருந்த ஐஸ்வர்யா ராயை பார்த்து உங்களுக்கு என்னாச்சு என ரசிகர்கள் பதறினார்கள். அம்மாவுக்கு துணையாக ஆராத்யா இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தியுள்ளனர்.
சிறுபிள்ளையாக இருந்ததில் இருந்தே ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்று வருகிறார் ஆராத்யா. இந்த முறை அவரும் டிசைனர் கவுனில் அம்மாவுடன் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கெரியரை பொறுத்தவரை தன் குரு மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்த பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்கள் வெற்றி பெற்றன. அதில் நந்தினியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஐஸ்வர்யா ராய்.
ஐஸ்வர்யா ராய் தவிர்த்து கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவ்தெலா. அவர் பிங்க் நிற கவுனில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்தார். லெஜண்ட் சரவணின் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பழக்கமான முகமாக ஆகிவிட்டார் ஊர்வசி. அவரும் தற்போது ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.