Sangathy
Sports

மெதுவாக பந்துவீச்சு : ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் – ஒரு போட்டியில் ஆட தடை..!

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி மும்பை அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தி்ல் லக்னோவிடம் தோற்று கடைசி இடத்தை பிடித்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது.

நிக்கோலஸ் பூரண் 29 பந்தில் 75 ரன்னும் (5 பவுண் டரி), 8 சிக்சர்), கேப்டன் கே.எல்.ராகுல் 41 பந்தில் 55 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். நுவன் துஷாரா, பியூஸ் சாவ்லா தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப் புக்கு 196 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 18 ரன் வித்தியாசத் தில் தோற்றது.

ரோகித் சர்மா 38 பந்தில் 68 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்), நமன்திர் 28 பந்தில் 62 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக் தலா 2 விக்கெட்டும், குணால் பாண்ட்யா, மோஷித் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.

5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தை பிடித்தது.

லக்னோ 7-வது வெற்றியை பெற்றது. அந்த அணி கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது. லக்னோவும், டெல்லியும் தலா 14 புள்ளிகளை பெற்று இருந்தாலும் ரன் ரேட்டில் மிக மோசமாக இருந்ததால் ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியாமல் போனது.

இந்த ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணி பந்து வீசவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி தொடரில் இதே மாதிரி தடை விதிக்கப்பட்ட 2- வது வீரர் ஆவார். ஏற்கனவே ரிஷப் பண்டுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது டெல்லி அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பாதித்தது.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த சீசன் முடிந்துவிட்டது. மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது.

மேலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ. 30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அணியில் ஆடிய மற்ற வீரர்களுக்கும் தலா ரூ.12 லட்சம் அல்லது 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கு ₹12 லட்சம் அபராதம் விதிப்பு..!

tharshi

மே மாத தொடக்கத்தில் A/L பரீட்சை பெறுபேறுகள்..!

tharshi

Sri Lanka crush Ireland to complete 100th Test win

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy