Site icon Sangathy News

அமேசான் டெலிவரியில் வந்த பாம்பு : அதிர்ச்சியில் வாடிக்கையாளர்..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சர்ஜாபூரில் வசிக்கும் ஐ.டி. தம்பதியினர் அமேசானில் XBOX CONTROLLER என்ற வீடியோ கேம் கருவியை ஆர்டர் செய்தனர்.

ஆனால், அமேசான் நிறுவனமோ, வீடியோ கேம் கருவியுடன் இலவச இணைப்பாக பாம்பையும் பார்சலில் அனுப்பி உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர், வீடியோ எடுத்து அமேசான் நிறுவனத்திடம் முறையிட்டுள்ளனர்.

பார்சலை ஒட்டும் ஸ்டிக்கர் நடுவே பாம்பு சிக்கியதால், அதனால் தப்பிக்க முடியவில்லை. அதே சமயம், பாம்பின் உயிருக்கும் ஆபத்து நேரவில்லை. இந்நிலையில் பாம்பால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அமேசான் நிறுவனம் XBOX CONTROLLER-க்கான முழுத் தொகையையும் திருப்பிக் கொடுத்துள்ளது.

ஆனால், தங்கள் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் என்ன செய்வது என்று நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version