Site icon Sangathy News

கள்ளக்குறிச்சி வைத்தியசாலைக்கு சென்ற நடிகர் விஜய் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல்..!

கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதோடு 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் மாத்திரம் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் கள்ளக்குறச்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார்.

இரவு 8 மணிக்குள் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்றடைவார் என தகவல் வெளியான நிலையில், விஜய் தற்போது மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து காலை அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் உடன் சென்றுள்ளனர்.

Exit mobile version