Site icon Sangathy News

வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு..!

பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தஹம் வெவ பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

49 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் மூக்கு மற்றும் காதுகளில் இருந்து அதிகளவு இரத்தம் வடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் தூக்கில் தொங்கி இறந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறித்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக சடலம் பொலன்னறுவை மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் மெதிரிகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version