Site icon Sangathy News

30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூதூர் 5 பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (25) மாலை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் பாடசாலையில் மேலதிக வகுப்பில் கலந்துகொண்ட போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலையை அண்மித்த பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குளவி கூட்டில் இருந்த குளவிகளே இவ்வாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியரை கொட்டியுள்ளது.

இந்த அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட 22 மாணவர்களும் 8 மாணவிகளும், ஆசிரியரும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version