Site icon Sangathy News

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு இன்று நீர் வெட்டு..!

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு இன்று (29) நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 மணி நேரம் நீர் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவலை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய மாநகர சபைப் பகுதிகளுக்கும், கொட்டிகாஹவத்த, முல்லேரியா பிரதேச சபை பகுதிகளுக்கும் நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், மொரட்டுவ மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தளையில் உள்ள நீர் சுத்திகரிப்பு அமைப்பின் அத்தியாவசிய புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version