அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ப்ரேமலு புகழ் நெஸ்லன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகின்றார். லைக்காவின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் தயாராகும் இப்படத்தின் 70 % படப்பிடிப்பு முடிந்துள்ளது. மீதமுள்ள படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
மைத்திரி முவி மேக்கர்ஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது. முதலில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு ஜூன் மாதம் தான் துவங்குவதாக இருந்தது. ஆனால் மே மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அஜித்தின் திரைப்பயணத்திலேயே முற்றிலும் மாறுபட்ட வித்யாசமான ஒரு படமாக குட் பேட் அக்லி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வரலாறு திரைப்படத்திற்கு பிறகு அஜித் இப்படத்தின் மூலம் மீண்டும் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கின்றார். இது இப்படத்தின் போஸ்டரின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. என்னதான் இப்படத்தின் போஸ்டர் சில சலசலப்பை ஏற்படுத்தினாலும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு ரீச்சை அடைந்திருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஸ்ரீலீலா மற்றும் நயன்தாரா நாயகிகளாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷும் இப்படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. குட் பேட் அக்லி திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் அஜித் நடிப்பதால் இப்படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள் நடிக்க இருக்கிறதாக தெரிகின்றது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தற்போது இப்படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றார். மலையாளத்தில் வெளியாகி செம ஹிட்டடித்த ப்ரேமலு படத்தில் நாயகனாக நடித்த நெஸ்லன் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மலையாளத்தில் லேட்டஸ்ட் சென்சேஷனல் ஹீரோவாக வலம் வரும் நெஸ்லன் இப்படத்தில் மிக முக்கியமான ஒரு ரோலில் நடிக்க இருப்பதாக தெரிகின்றது.
இந்த தகவல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியிருக்கிறது. லேட்டஸ்ட் சென்சேஷன் நடிகர்களான ஸ்ரீலீலா மற்றும் நெஸ்லன் ஆகியோர் அஜித்துடன் இணைந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.