Site icon Sangathy News

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் மாயம்..!

17 வயதுடைய மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நேற்று (30) மாலை கல்கிஸ்ஸையில் கடற்கரையில் நீராடச் சென்ற சிலரில் மூன்று பேர் அலையில் சிக்கி அடித்துச் சென்றனர்.

அப்போது உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையின் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள், 2 பேரை மீட்டனர்.

ஆனால் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

கல்கிஸ்ஸை அபேசேகர மாவத்தையில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன மாணவனைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version