Site icon Sangathy News

கணவனிடம் வீடியோ கோல் பேசிய மனைவி கணவன் கண்முன்னே தற்கொலை..!

யாழ். கூழாவடி மேற்கு ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பெண் பிள்ளைகளின் தாய் ஒருவர் கணவனின் கண்முன்னே தற்கொலை செய்துள்ளார்..

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவருடன் கடந்த 24ஆம் திகதி வீடியோ அழைப்பில் கதைத்துக்கொண்டு இருந்த போது இருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பெண் கணவனின் கண்முன்னே தற்கொலை செய்துள்ளார்.

இதன்போது கணவன் அயல் வீட்டவருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதையடுத்து அயல் வீட்டார்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை (01) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Exit mobile version