Site icon Sangathy News

ஹிருணிகாவின் கோரிக்கைக்கு சட்டமா அதிபரின் எதிர்ப்பு..!

3 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்தார்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்டது.

அங்கு, இந்த கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாக தெரிவித்த அரசாங்க சட்டத்தரணி, அதனை எழுத்து மூலம் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறும் கோரினார்.

இதன்படி, சட்டமா அதிபருக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கையை எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறும் உத்தரவிட்டார்.

Exit mobile version