Sangathy News

கேரள மண்சரிவில் 163 பேர் பலி : மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம்..!

இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் நேற்றைய தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 மண்சரிவுகளில் சிக்கி 150இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை 1,500 இற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்ற நிலையில், பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வயநாட்டில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version