Site icon Sangathy News

யூனிபார்முடன் கோச்சிங் சென்டர் விளம்பரத்தில் நடித்த பெண் போலீஸ் சஸ்பெண்ட்..!

மத்தியப் பிரதேசத்தில் காவலர் சீருடை அணைத்தவாறு தனியார் பயிற்சி மைய விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் இயங்கி வரும் போட்டித் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் பெண் கான்டபிள் ஒருவர் சீருடை அணைத்தவாறு நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதைத்தொடர்ந்து போலீஸ் மேலதிகாரிகளின் கவனத்துக்கு இது சென்றுள்ளது. எனவே அவரை தற்போது இடைநீக்கம் செய்து காவல் கண்கணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதியளித்துள்ளார்.

Exit mobile version