Site icon Sangathy News

பேலியகொட பகுதியில் நபரொருவர் படுகொலை..!

பேலியகொட, நாரம்மினிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் நபர் ஒருவர் தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதுடன், தாக்குதலில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (19) காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் களனி, நாரம்மினிய வீதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக சிலர் குறித்த நபரை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கொட்டுகச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version