Site icon Sangathy News

தேவையேற்பட்டால் இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்வேன் : டில்ஷான்..!

நான் இரட்டை குடியுரிமை பெற்றவன். எனக்கு பாராளுமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேவையேற்பட்டால் இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்யவும் தயாராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்த பின்னரே அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று (20) ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரைச் சுற்றி சிறந்த ஒரு அணி திரண்டுள்ளதாகவும், ஒரு சிறந்த தலைவருக்கு சிறந்த அணியொன்று கட்டாயம் அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விளையாட்டுத்துறை அமைச்சு பதவியையோ அல்லது வேறும் எதிர்ப்பார்த்து எதிர்க்கட்சியில் இணையவில்லையெனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

பெரிய தியாகம் செய்தே இங்கு வந்துள்ளேன். என் பிள்ளைகள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். கட்சி வேறுபாடின்றி நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என் குழந்தைகளை விட்டு இலங்கைக்கு வந்துள்ளேன் என்றார்.

Exit mobile version