Site icon Sangathy News

வழிபாட்டுத் தலத்துக்கு சென்ற பாகிஸ்தானியர்கள் 28 பேர் விபத்தில் பலி..!

பாகிஸ்தானிலிருந்து ஈரானில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டு தலத்துக்கு சென்ற பஸ் நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய ஈரான் மாகாணமான யாஸ்த் பகுதியில் இந்த விபத்து நேரிட்டதாகவும், மீட்புப் பணிகள் இரவு முழுவதும் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பஸ்ஸில் 51 பேர் பயணித்ததாகவும் அதில் 28 பேர் உயிரிழந்ததுடன். 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version