Site icon Sangathy News

கட்டிட வேலையில் ஈடுபட்ட தொழிலாளர் சடலமாக மீட்பு..!

கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று இரவு இருவர் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் ஒருவர் நித்திரைக்கு சென்றிருந்தார்.

மற்றவர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அதிகாலை எழுந்து மற்றவரை காணாது தேடிய போது சடலமாக கீழே காணப்பட்டார் என பொலிசாருக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைச்சேர்ந்த 34வயதுடைய சின்னான்டி பரமேஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

Exit mobile version