Site icon Sangathy News

“வாழை” பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் : சிவகார்த்திகேயன்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாழை படத்தை சிவகார்த்திகேயன் பாராட்டி பேசியுள்ளார். அந்த வீடியோவை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில்,

“மிக நெருக்கமான ஒருவரின் கதையை கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மாரி செல்வராஜ் மீண்டும் மீண்டும் தான் ஒரு strong-ஆன இயக்குநர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். ‘வாழை’ என்னுடைய favourite படமாக மாறியுள்ளது. பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் இந்த வாழை” என்று சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

மாரி செல்வராஜ் அவரது பதிவில்,

“பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள் …கர்ணன் மாமன்னன் என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்து கொண்டாடி தீர்த்த வார்த்தைகளை பத்திரப்படுத்தியதை போலவே இன்று வாழைக்கு நீங்கள் இவ்வளவு ப்ரியத்தோடு தந்திருக்கும் வார்த்தைகளையும் நல்ல தோழனாக பத்திரப்படுத்திகொள்கிறேன். நன்றி” பதிவிட்டுள்ளார்.

Exit mobile version