Site icon Sangathy News

மனைவி மரணம் : மன உளைச்சலில் கணவன் தற்கொலை..!

யாழ். நாவற்குழியைச் சேர்ந்த ஆண் ஒருவர் நேற்று (27) மனைவியின் மரணத்தினால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனுவல் சூசைமுத்து என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் குறித்த நபரின் மனைவி சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதுடன், குறித்த நபர் தனது மனைவியின் மரணத்தையடுத்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version