Site icon Sangathy News

உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி : ஒருவர் படுகாயம்..!

பண்டாரவளை, பூனாகல தோட்டம், உடஹேன வீதியில் தேயிலை கொழுந்து ஏற்றச் சென்ற உழவு இயந்திரமொன்று வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் சாரதி படுகாயமடைந்துள்ளதாக லியங்கஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரவளை பூனாகல வட்ட உடஹேன பகுதியைச் சேர்ந்த வீரமுத்து சுந்தரேசன் என்ற 54 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.

உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்ற சாரதி படுகாயமடைந்து கொஸ்லந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூனாகலை தோட்டத்திற்குச் சொந்தமான உழவு இயந்திரம் தேயிலை கொழுந்து ஏற்ற உடனே நோக்கிச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version