சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட பன்னிரெண்டு தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியை வைத்திருந்த 17 வயது மாணவன் அஹெட்டுவாகமவில் கைது செய்யப்பட்டதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹலபவெவ, கலாடிவுல்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய மாணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வாகன விபத்துக்குள்ளாகி வீட்டில் தங்கியிருந்த தந்தையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை குறித்த மாணவன் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தியுள்ளாதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.