Site icon Sangathy News

உணவு ஒவ்வாமை: தனியார் நிறுவன ஊழியர்கள் 43 பேர் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாக தனியார் நிறுவன ஊழியர்கள் 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (04) காலை களுத்துறை மாவட்டம் பாதுக்க வட்டரக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குழுவினர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த குழுவில் 25 பெண்களும் 18 ஆண்களும் உள்ளதாகவும் அவர்கள் 20-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்திற்குள் இயங்கி வரும் சிற்றுண்டிச்சாலை மூலம் குறித்த ஊழியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி ஒவ்வாமை ஏற்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Exit mobile version