Site icon Sangathy News

தெஹிவலை மேம்பாலம் அருகே நடந்த கோர விபத்து: சிதறிப் போன கார்

கொழும்பு – தெஹிவலை மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோரவிபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் மேம்பாலத்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானதுடன், பாரியளவு சேதமடைந்துள்ளது.

சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version