Site icon Sangathy News

அதிகரித்த ரீல்ஸ் மோகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

இந்தியா, உத்தரப் பிரதேசம் லகிம்பூரைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து ரயில் பாதையில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த பயணியர் ரயிலொன்று அவர்கள் மீது மோதியுள்ளது.

இவ் விபத்தில் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அண்மைக் காலமாக ரீல்ஸ் மோகத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version