Site icon Sangathy News

நாங்கள் இலங்கை பணத்தை கொள்ளையடித்து இருந்தால் நிரூபித்து காட்டுங்கள் அநுரவிற்கு சவால் விடும் நாமல்

ராஜபக்சர்களின் ஆட்சிக் காலத்தில் உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் பில்லியன் கணக்கிலான டொலரை பதுக்கி வைத்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல்கள் காலங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது அநுரகுமார திசாநாயக்க வெளியிட்ட கருத்து ஒன்றை தமது எக்ஸ் தளத்தில் காணொளியாகப் பதிவேற்றி குறித்த சவாலை விடுத்துள்ளார்.

தமது குடும்பம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி உள்ளிட்ட அவரது தரப்பினர் பல வருட காலமாகக் குற்றம் சுமத்தி வருவதாக நாமல் கூறியுள்ளார்.

அந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் காலம் தற்போது நெருங்கியுள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார்.

 

https://x.com/RajapaksaNamal/status/1841374461557145750

 

Exit mobile version