Site icon Sangathy News

லண்டனில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட தமிழருக்கு சிறைத்தண்டனை

பிரித்தானியாவில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்ற 8 குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டன் குறொய்டன் பகுதியை சேர்ந்த 51 வயதான ஜேக்கப் தனுகரன் எனும் நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2000 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version