Site icon Sangathy News

சீரற்ற காலநிலையால் ஒன்றரை இலட்சத்தை நெருங்கும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் கன மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கில் இருந்து வடமேல் திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை கடலில் பயணம் செய்ய வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version