Site icon Sangathy News

நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடிப்பு : பலி எண்ணிக்கை உயர்வு..!

நைஜீரியாவின் வட மேற்கு பகுதியில் எரிபொருள் தாங்கிக் கொள்கலன் வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் கொள்கலன் தாங்கி ஊர்தி வீதியை விட்டு விலகியதில் குறித்த எரிபொருள் கொள்கலன் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து, அந்த கொள்கலனிலிருந்து எரிபொருளைச் சேகரிக்கப் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

இதன்போது, அந்த எரிபொருள் தாங்கி வெடித்ததைத் தொடர்ந்து எரிபொருளை சேகரிக்க முயன்ற பலர் உயிரிழந்தனர்.

 

Exit mobile version