Site icon Sangathy News

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு..!

தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இவ்விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பரஸ்பரம் விவாகரத்து கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு மீதான விசாரணையை அக். 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து, இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த அக்.7-ந்தேதி நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகாததால் விசாரணையை 19-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு 2-வது முறையாக தனுஷூம் ஐஸ்வர்யாவும் ஆஜராகவில்லை.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கு விசாரணையை நவ.2-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version