Sangathy News

மஹிந்த, ரணிலுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வௌியான தகவல்..!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வமாக உரித்துடைய எவையும் பறிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே பண்டாரவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில், “மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட 3 வாகனங்கள் பெறப்பட்டது” என்று பரவிவரும் செய்தி தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் இருந்த 16 வாகனங்களில் 8 வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டில் 11 வாகனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை கீழே காணலாம்…

Exit mobile version